மன்னார்குடியில் நீர், மோர், தண்ணீர், பந்தல் : அமைச்சர் காமராஜ் திறப்பு

மன்னார்குடியில் அதிமுக இளைஞரணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் .

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் எ அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டதை தொடர்ந்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக இளைஞரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள நீர், மோர், தண்ணீர் பந்தலை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மேர், தர்பூசணி, இளநீர், ஆரஞ்ச் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்,

இதில் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம் , முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் சிவா. ராஜாமணிக்கம், சுதா, ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வம் , தமிழ்கண்ணன், ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் உள்ளிட்ட இளைஞரணி, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future of ai in retail