துளசேந்திரபுரம் வடக்கு ஏரி தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள வடக்கு ஏரி ரூ1 கோடி மதிப்பீட்டில் சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியில் தூர்வாரும் பணி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநர் காமகோடி , வங்கி இயக்குநர்கள் குழுவோடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து ஏரியின் கரை முழுவதும் பனைமரம், புன்கண் உள்ளிட்ட பலன் தரும் மரகன்றுகளை நட்டனர் . வடக்கு ஏரி தூர் வாரபட்டதின் மூலமாக பைங்காநாடு, ராஜகோபாலபுரம் , தலையாமங்கலம், தென்பாதி, மெய்பழதோட்டம், கண்ணாரபேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
பின்னர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குனர் காமகோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் 2017 முதல் 2020 வரை நான்காண்டுகளில் 500 ஏக்கர் பரப்பளவில் 6 ஏரிகள், 3 குளங்கள், 52 கிமீ ஆறு மற்றும் பாசன வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு நான்கு புறமும் கரைகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu