மன்னார்குடி பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகள் தோறும் காய்கறி விற்பனை

மன்னார்குடி பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகள் தோறும் காய்கறி விற்பனை
X

மன்னார்குடி பகுதிகளில் குறைந்த விலையில் வீடுகள் தோறும் சென்று காய்கறி விற்பனை

மன்னார்குடி பகுதிகளில் உழவர் சந்தை விலைக்கே குறைந்த விலையில் வீடுகள் தோறும் சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்களில், நகரங்களில் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய நடமாடும் காய்கறி விற்பனையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் விற்பனை வணிகத்துறை வழிகாட்டுதலோடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் , நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கரிகாலன் பயறு உற்பத்தியாளர்கள் குழு சார்பில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் நாட்டு காய்கறிகளை மொத்தமாக வாங்கி குறைந்த விலையில் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு 74-க்கும் மேற்பட்ட வாகனத்தில் வீடுகள் தோறும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து விவசாயி கூறுகையில், விவசாயிகள் விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்வதால் நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதாகவும் அதே சமயம் பொதுமக்களிடம் விற்பனை செய்யும் போதும் உழவர் சந்தை விலைக்கே காய்கறிகளை விற்பதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story