மன்னார்குடி காவல் துணை கண்காணிப் பாளரிடம் விடுதலை சிறுத்தை கட்சி கோரிக்கை மனு
மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்
விடுதலை சிறுத்தை கட்சியினர் மன்னார்குடியில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனுஅளித்தனர் .
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மீதும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினையும் தரக்குறைவாக அவதூறு பரப்பிவரும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மன்னார்குடியில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர் .
சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் மீது தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் அவரது ஜாதியை இழிவு படுத்தியும் மறைந்த தமிழக முதல்வர் கருனாநிதியை வயது வித்தியாசம் பாராமல் பேசியது , தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலினையும் தரக்குறைவாக பேசிவரும் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிவசேனா கட்சி நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலசந்தரிடம் விடுதலை சிறுத்தை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வி.த. செல்வம் கோரிக்கை மனு அளித்தார் இதில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu