கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு 2 கிராம் வெள்ளி காசு பரிசு

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு 2 கிராம் வெள்ளி காசு பரிசு

கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  நடந்த கொரானா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2 கிராம் வெள்ளிகாசு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று பரவலைகட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரதுறை சார்பில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவம் வரும்

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கொரானா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்நடைபெற்றது .இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் சிறப்பு பரிசுகளான இரண்டு கிராம் வெள்ளி காசுகளை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகா ராதாகிருஷ்ணன் வழங்கினார் . இதில் வட்டார மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர் .


Tags

Next Story