மன்னார்குடியில் இயல் , இசை, நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடிகருக்கு அஞ்சலி

மன்னார்குடியில் இயல் , இசை,  நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  நடிகருக்கு அஞ்சலி
X
மன்னார்குடியில் இயல் , இசை, நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விவேக் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

மாரடைப்பால் மரமணமடைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மன்னார்குடியில் இயல் , இசை, நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நகைச்சுவை நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் விவேக் உயிரிழந்துள்ளார் இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள கிராமிய கலைஞர்கள், இயல் ,இசை , நாடக, கலைஞர்கள், தன்னார்வ அமைப்பினர் , பள்ளி மாணவ , மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேருந்து நிலையம் முன்பு இயல் , இசை , நாடக, கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விவேக் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்