பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
X
மன்னார்குடி அருகே ரிஷியூர் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய நெல் அறுவடை திருவிழாவை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் கிராமத்தில் ரிஷியூர் இயற்கை வேளாண் பண்ணை மற்றும் ஆதிரெங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையமும் இணைந்து பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது.

விழாவிற்கு இயற்கை நெல் சாகுபடி விவசாயி செந்தில் உமையரசி தலைமை வகித்தார். இயற்கை வேளாண் வல்லுனர்கள் புத்தகளுர் உதயகுமார், அப்துல்லாராவுத்தர், முகமதுரபீக், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வரவேற்றார்.

இதில் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூங்கார் பாரம்பரிய நெல் அறுவடை திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் சகிலா கணேசன் நன்றி கூறினார்

Tags

Next Story
ai in future agriculture