மன்னார்குடி அருகே பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடை திருவிழா
மன்னார்குடி அருகே பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடையை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
உலக அளவில் பல்வேறு நோய்களுக்கு மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உயிரினங்களும் பலவித நோய்களுக்கு உள்ளாகி வருவதற்கு அடிப்படை காரணம் நமது மண்ணின் தன்மை மாறி வருவதே அடிப்படை காரணம். அத்தகைய உயிரினங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் மண்ணை பாதுகாத்தாலே மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து விதமான உயிரினங்களும் நோய் நொடியின்றி வாழ்வாழ்கு வாழலாம்.
அந்த வகையில் தற்போது இயற்கை விவசாய முறையில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகாலமாக ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான கருப்பு கவுனி என்ற நெல் ரகம் காலபோக்கில் மறைந்துவிட்டன. அத்தகைய அரியவகை நெல் ரகத்தை தேடி கண்டறிந்து மன்னார்குடி அருகே உள்ள ரிஷியூர் என்ற கிராமத்தில் ஆர்.கே.எம் இயற்கை வேளாண்மையம் மற்றும் ஆதிரெங்கம் மறைந்த நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 5 ஏக்கரில் சாகுபடி செய்து பயிர் வளர்ச்சிக்கு ரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி கம்பீரமான வளர்த்து உள்ளார்.
அதன் அறுவடையை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். குறிப்பாக பாரம்பரியம் என்ற சொல்லுக்கு வலிமை சேர்க்கும் வகையில் பண்டைய கால மன்னர் ஆட்சியினை நினைவுபடுத்தும் வகையில் குதிரை படை முன்னெடுக்க இத்தகைய கருப்பு கவுனி நெல் ரகம் அறுவடை சிறப்பாக நடைபெற்றது. இதில் பொன்னை இராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu