மன்னார்குடியில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் பாஜக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்
X
பொதுத்துறை, அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்தக்கோரி, மன்னார்குடியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பெரியார் சிலை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில், பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவரச சட்டத்தை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் செங்குத்தான விலை உயர்வை உடனே நிறுத்த வலியுறுத்தியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!