மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார வாரிய ஊழியர்கள்.

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவது கைவிடக்கோரி மன்னார்குடியில் மின்சார வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சார சட்ட திருத்தம் 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தி மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது பேசிய தொழிற்சங்கத்தினர், 2021 மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் வீட்டு மின்சார கட்டணம் பல மடங்கு உயரும். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் ரத்து செய்யபடும் எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கு மேயானால் தொழிற்சங்கத்தை ஒன்று திரட்டி பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசுக்கு தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business