மன்னார்குடி அருகே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தேடப்பட்ட திருடன் கைது

மன்னார்குடி அருகே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தேடப்பட்ட திருடன் கைது
X
மன்னார்குடி அருகே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தேடப்பட்ட திருடன், போலீசாரின் வாகனச்சோதனையில் சிக்கினார் .

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை தொடர்பாக முத்துப்பேட்டை சிறப்பு தனிப்படை எஸ்ஐ சுரேந்தர் தலைமையில், காவலர்கள் ஐயப்பன், திருமுருகன், மணிவண்ணன், சக்தி மணாளன் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இதற்காக, முத்துப்பேட்டையில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில், காவலர்கள் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசராணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த கட்ட ரமேஷ்குமார் என்கிற ரமேஷ் என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரமேஷிடம் இருந்து, 10பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai powered agriculture