தமிழர்கள் சொத்துக்கள் மீது கலவரத்தை தூண்டுவதற்கு எடியூரப்பா முயற்சி: பி.ஆர்.பாணடியன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிஆர் பாண்டியன்
மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து டெல்லியில் முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் வருகிற 22 ஆம் தேதி முதல் பாராளுமன்றம் முன் தொடர் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். அதனை திசை திருப்புவதற்கும், விவசாயிகள் அச்சுறுத்துவதற்கும் தேசவிரோத சட்டங்களை மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போட்டு அச்சுறுத்துகிறது.
அப்போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு உரிய அனுமதி அளித்து கோரிக்கையின் நியாயத்தை அறிந்து பாராளுமன்றத்தில் சட்டத்தை கைவிட மத்திய அரசு முன் வரவேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக அனைத்து விவசாய சங்கம் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எடியூரப்பா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு மறைமுகமாக பிரதமரும் , ஜல்சக்திதுறை அமைச்சரும் ஆதரிக்கிறார்கள். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்யாமல் முடக்க முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக அரசின் துரோக செயலை கண்டித்து குடியரசுத் தலைவரை சந்தித்து பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர சிறந்த தலைவரை நியமித்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுவதற்கு பிரதமர் அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவை குடியரசுத்தலைவர் வழங்கவேண்டும்.
வரும் ஜூலை 26 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகையிட இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உடனடியாக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். கர்நாடக அரசு ஏற்கனவே சித்தராமையா பதவியிலிருந்தபோது சிறையிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள், குண்டர்களை விடுவித்து மிகப்பெரிய கலவரத்தை தூண்டியது. பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தமிழர்கள் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். எனவே தற்போது சீதாராமையா வழியை பின்பற்றி கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் உட்கட்சி பூசலை திசைதிருப்புவது, கர்நாடகாவில் காவிரி பிரச்சனை முன்வைத்து தமிழர்கள் மீதும், தமிழர்கள் சொத்துக்கள் மீதும் கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி எடுப்பதாக தகவல் வந்துள்ளது என திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆா். பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu