மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய  சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்
X

மன்னார்குடியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடி நகராட்சி பகுதிக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் கான்க்ரிட் வீடு வழங்கிட வேண்டும். அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தை நகர பகுதிக்கும் வழங்கிட வேண்டும். 58 வயதான ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளை நீக்க சிறப்பு முகாம் அமைக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!