கோடை குறுவை நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வருக்கு பிஆர் பாண்டியன் கோரிக்கை
திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எட கீழையூர், எட அன்னவாசல் , எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களிலிலும் சாலை ஓரங்களிலும் நெல் மூட்டைகள் சேமித்து வைத்திருப்பதை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார் .
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிடுவார் என்ற எதிர்பார்ப்போடு காத்துள்ளனர். கோடை உழவு பணிகள் நேரடி விதைப்பு செய்வதற்கு தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர் வாருவதற்கு நீர்ப்பாசனத்துறை ரூபாய்48 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது. பணிகள் குறித்து வெளிப்படைத் தன்மையோடு குறிப்பிட்ட காலத்தில் துவங்கி குறித்த காலத்தில் முடித்திட வேண்டும்.
பணிகளுக்கான முழு விபரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் பணிகள் துவங்கும் இடத்தில் உடனடியாக அமைத்திட வேண்டும் இதனை விவசாயிகள் கொண்ட குழுக்கள் மூலம் கண்காணித்திட வேண்டும்.
நெல்கொள்முதல் தீவிரமடைந்துள்ளது பல மாவட்டங்களில் கொல்முதல்நிலையங்கள் திறக்காமல் காலதாமதபடுத்தபடுகிறது .உடனடியாக தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்வதை விரைவு படுத்தவேண்டும் .
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500-யை விலையை வழங்கி கொள்முதலை துவங்கிடவேண்டும் . ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை அரசு திரும்பப் பெற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu