தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மன்னார்குடியில் மாணவர்கள் போராட்டம்
மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வு கண்டித்து போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் உயர்கல்வி துறை பல்கலைக் கழகங்களின் தேர்வு கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி இருப்பதை கண்டித்து நாகை, திருவாரூர் , தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஏழை எளிய விவசாய தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. அரசின் ஆலோசனையின் பெயரில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தேர்வு கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி மாணவ மாணவியர்களின் கல்லூரி கல்வியை கேள்வி குறியாக்கியுள்ளது. திமுக அரசின் மாணவர்கள் விரோத போக்கை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் 1000த்திற்கும் மேற்ப்பட்டோர் தி.மு.க. அரசை கண்டித்தும் , பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி கல்லூரி வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu