பள்ளி வளாகத்தில் விஷப் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

பள்ளி வளாகத்தில் விஷப் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை
X

பாம்பு கடித்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவியை விஷ பாம்பு கடித்ததால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபேந்திரன். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளையமகள் நவரஞ்சினி அருகில் உள்ள சவளக்காரன் அரசினர் மேல்நிலைப்பள்ளியல் 11ம்வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கலையில் பள்ளிக்கு வந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது எதிர்பாராமல் விஷபாம்பு ஒன்று கடித்து விட்டது. மாணவியின் அழுகை சத்தம் கேட்டு ஆசிரியர்கள் கழிவறை அருகே சென்று பார்த்தபோது மாணவி நவரஞ்சினி தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறினார்.

பின்னர் மாணவியை மீட்டு ஆசிரியர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!