மன்னார்குடியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்

மன்னார்குடியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்
X

மன்னார்குடியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலசந்திரன் துவக்கி வைத்தார் .

மன்னார்குடியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலசந்திரன் துவக்கி வைத்தார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மறைந்த உடற்பயிற்சி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நினைவாக 2021-22ம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி மன்னார்குடியில் உள்ள பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு அணிகள் பங்கேற்றுள்ளது. முன்னதாக விளையாட்டு வீரர்கள் கொண்டு சென்ற தீபஒளி பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் தேரடியில் துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு சென்று விளையாட்டு அரங்கில் ஏற்றி போட்டிய துவக்கி வைத்தனர். முதல் போட்டியானது காரைக்குடி, மன்னார்குடி அணிகளுக்கு இடையே துவங்கியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்