மன்னார்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்கள் கைது

மன்னார்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த  4 இளைஞர்கள் கைது
X

மன்னார்குடி பகுதியில் கைது செய்யப்பட்ட 4 பேர்.

மன்னார்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த வலங்கைமான் அருகே திருவோணமங்கலத்தை சேர்ந்த கவுண்டன் ( எ ) ராஜேஷ் ( 31 ) , மன்னார்குடி அருகே குருவைமொழி கிராமத்தை சேர்ந்த பிரவின் குமார் ( 27 ) , பாலாஜி ( 20 ) , பாமணி உள்ளூர்வட்டம் பிரவின் ( 21 ) ஆகிய 4 நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனம் , ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள லாரி டயர்களும் , ரூ3 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்செய்து .குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!