மன்னார்குடி தஞ்சாவூர் மேற்கு சர்வோதய சங்கத்தில் காதி பவன் திறப்பு

மன்னார்குடி தஞ்சாவூர் மேற்கு  சர்வோதய சங்கத்தில் காதி பவன் திறப்பு
X

மன்னார்குடியில் புதிதாக திறக்கப்பட்ட காதி பவனில் முதல் விற்பனையை முன்னாள் அமைச்சர் காமராஜ் பெற்றுக்கொண்டார்.

Khadi Kraft Thanjavur-மன்னார்குடி பந்தலடி காந்தி ரோட்டில் உள்ள தஞ்சாவூர் மேற்கு சர்வோதய சங்கத்தில் காதி பவன் திறப்பு விழா நடைபெற்றது.

Khadi Kraft Thanjavur-திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியுள்ள காந்தி ரோட்டில், தஞ்சாவூர் மேற்கு சர்வோதய சங்கத்தில் காதி பவன் திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

தஞ்சை மேற்கு சர்வோதய சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தார். கதர் கிராம தொழில் ஆணைய மாநில இயக்குனர் பாண்டியன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ரமணா ராவ் கதர் பொருட்களின் விற்பனையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில் வாரிய மாநில இயக்குனர் பாண்டியன் பேசும்போது கிராம புறத்திலுள்ள இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டத்தின் கீழ் கதர் கிராம தொழில் வாரியம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியன் வங்கியின் மூலம் அவர்களுக்கு கடன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காதி பவன் மூலம் விற்பனை செய்யப்பட்டு சந்தைப்படுத்தபடும். தமிழகம் முழுவதும் உள்ள, 700 கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் உணவுதுறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான காமராஜ் முதல் விற்பனையாக குத்து விளக்கை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி மதியழகன், மாவட்ட வேளாண் விற்பனை குழு துணை தலைவர் தமிழ்ச்செல்வம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்ஜி.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business