/* */

பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்
X

பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

மிகவும் பழமையான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி ஹஜரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழாவையொட்டி இன்று சந்தனக்கூடு ரத ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது . மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் பரப்புவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து சாதிமத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து அருளாசி வழங்கியதோடு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை தனது பார்வையால் குணமடைய செய்து வந்துள்ளார். இறுதியாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி வந்து தங்கிய அவர் அங்கேயே அடக்கமானார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தர்க்காவின் புனித கந்தூரி விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரத ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு ரத ஊர்வலம் நாளை அதிகாலை மீண்டும் மகான் அடக்கத் தலத்தை அடைந்து பின்னர் மகான் சமாதி மீது சந்தனம் பூசும் நிகழ்ச்சி அதிகாலை நடைபெற உள்ளது.

இத்தகைய பெருமை மிக்க கந்தூரி விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சந்தனக்கூடு ரத ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்.

Updated On: 22 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்