மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை
X
மன்னார்குடி அருகே கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுபான கடை.
மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம், மது பாட்டில்களை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னை நகர்பகுதியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது .இந்த கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 30 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கபணத்தையும் திருடி சென்றுள்ளனர் .

இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் நேரடி விசாரணை நடத்தினார். காவல்துறை மோப் நாய் ராக்ஷி உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர் .மர்ம நபர்கள் அரசு மதுக்கடைகடையின் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர்.

இது குறித்து தடவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.மன்னார்கடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!