ராஜகோபாலசுவாமி ஆலய தெப்ப திருவிழா

ராஜகோபாலசுவாமி ஆலய தெப்ப திருவிழா
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலய தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. தென்னகத்து துவாரகை என பக்தர்கள் இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக தெப்ப திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிருஷ்ண தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ராஜகோபாலசாமி கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!