மன்னார்குடி அருகே மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கபாலம்: கிராமங்கள் துண்டிப்பு
மன்னார்குடி அருகே புன்ணியக்குடி என்கிற இடத்தில் இரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள உள்ளூர் வட்டம், பாமணி, செருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் புன்ணியக்குடி என்கிற இடத்தில் இரயில்வே சுரங்க பாதையின் வழியை கடந்து செல்ல வேண்டும் .தொடர்ந்து பெய்த கனமழையால் முழங்காலுக்கு மேல் பகுதி வரை மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மழைநீரும் சாக்கடையும் கலந்து சுரங்க பாதையில் குளம்போல் காட்சி அளிக்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி போக வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது . இது குறித்து பல முறை ரயில்வே நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் காலத்தோடு பள்ளிக்கு செல்லமுடியாமல் பொிதும் பாதிக்கபடுகின்றனர்.
அதைபோல் பொதுமக்கள் அவசர காலத்திற்கு மருத்துவமனை மற்றம் பொருட்கள் வாங்க அப்பகுதியை கடந்து செல்ல முடியாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் .ரயில்வே நிர்வாகம் உடனடியாக ராட்சத இயந்திரம் வைத்து சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வில்லையெனில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu