மன்னார்குடி ரயில் நிலையத்தில் மத்திய அரசு கண்காணிப்பு குழு ஆய்வு
மன்னார்குடி ரயில் நிலையத்தில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையின் வாயிலாக மத்திய அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாயினை ஈட்டிவருகிறது. இவ்வாறு வருவாய் ஈட்டிவரும் இரயில்வேதுறைக்கு ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் இரயில் பயணிகள் வசதிக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்து வருகிறது.
இத்தகைய நிதியின் மூலம் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கான ஓய்வறை, கழிப்பிடவசதி, குடிநீர்வசதி, வாகனங்கள்நிறுத்துமிட வசதி, மாற்றுதிறனாளிகளுக்கான வசதிகள் என பல்வேறு நிலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளை ஆய்வு செய்யும் வகையில் மத்திய அரசு கண்காணிப்பு குழுவினை அமைத்து ஒவ்வொரு இரயில் நிலையமாக ஆய்வு செய்து வருகிறது.
இதன்படி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள இரயில் நிலையத்திற்கு வந்த இக்குழு உறுப்பினர்களான டாக்டர்மஞ்சுநாதா இரவிச்சந்திரன், பொட்டாலா உமாராணி, அபிஜித்தாஸ் உள்ளிட்ட இரயில்வேதுறை உயர்அதிகாரிகள் நேரடி ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது இரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் ஓய்வறை, கழிப்பறை, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் எந்தவொரு பணிகளையும் முறையாக செய்யப்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பு குழுவினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்க இரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, இரயில் பயணிகள் வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முறையாக செலவு செய்திடவும் அறிவுறுத்தினர்.
இவ்ஆய்வின்போது கண்காணிப்பு குழுவினரிடம் மன்னார்குடி பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர் தமிழ்நாடு அரசு ஒப்பந்தகாரர், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu