மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்

மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்
X

பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினறுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் கிராமத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் 100-க்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வழங்கினார்.

திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் எடிசன் ரசிகர் மன்ற மன்னை ஒன்றிய பொருப்பாளர் சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட ரசிகர் மன்ற மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!