மன்னார்குடியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியைய்க்கு பாராட்டு

மன்னார்குடியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியைய்க்கு பாராட்டு
X

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியைய்க்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள் கஷ்டப்படுவது கண்டு உதவி செய்த மன்னார்குடி ஆசிரியைய்க்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள பைங்காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜாய்ஸ் (40), இவர் மன்னார்குடி அசேஷம் ஊராட்சியில் வசித்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள செய்யாறு கிராமத்தில் பெற்றோரை இழந்து தனது பாட்டியுடன் வாழும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஜெயசூர்யா, ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் டெண்டுல்கர் ஆகியோரின் ஏழ்மை நிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் ஜாஸ் தனியார் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அதனைக் கண்டு நெகிழ்ந்தவர். கடந்த பொங்கலை அந்த மாணவர்களுடன் தன்னை அவர்களின் தாயாக நினைத்து கொண்டாடி விட்டு மாணவர்களின் கல்வி செலவை முழுமையாக ஏற்று கொள்வதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆசிரியை ஜாய்ஸின் மகள்களான மித்ரா, இனியா ஆகியோர் தங்களது உண்டியலில் சேமித்து வைத்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை ஏழை மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து மனிதநேயமிக்க செயல் புரிந்தமைக்காக ஆசிரியை ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பைங்காட்டூர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்றினைந்து கேக் வெட்டி மரக்கன்றுகள் நட்டு ஆசிரியர் செய்த செயலுக்கு நன்றி தெரிவித்தார்கள் .

அதனை தொடர்ந்து அந்த மாணவர்களின் கல்வி செலவிற்காக முதற்கட்டமாக ஆசிரியர் ஜாய்ஸ் ரூ 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க சொன்னார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!