மத்திய,மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம்- பி.ஆர்.பாண்டியன்

மத்திய,மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம்- பி.ஆர்.பாண்டியன்
X

மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, வேளாண் விரோத சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், போராட்டத்தை கொச்சை படுத்த முயற்சிக்கிற மத்திய அரசு இதுவரையிலும் விவசாயிகள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க தயாராக இல்லை. போராட்டத்தை பிளவு படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்திருக்கின்ற பாஜக மற்றும் அதற்கு துணை போகின்ற அதிமுகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும் .

இன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் பாமணியில் இருக்கின்ற மத்திய அரசின் கொள்முதல் கிடங்கை தமிழக காவிரி சங்கம் முற்றுகையிடும். ஒட்டுமொத்தமாக தமிழகம் தேர்தல் களத்தில் நிற்கிற போது ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவை பிரதிபலிக்கின்ற வகையில் எங்கள் போராட்டம் பாமணியில் நடைபெறும் என அறிவிக்கின்றேன். இந்த போராட்டம் மத்திய பாஜக அரசு மற்றும் அதற்கு துணை போகின்ற அதிமுக இவற்றிற்கு தமிழகத்தில் பாடம் புகட்டுவதற்காக' என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!