மன்னார்குடி அருகே போலீஸ் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே  போலீஸ் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி
X

தற்கொலைக்கு முயன்ற பிரியதர்ஷினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்னார்குடி அருகே போலீஸ் தாக்கியதால் அவமானம் அடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள முதல்சேத்தி கிராமத்தில் வசிக்கும் தமிழ்க்கண்ணன்- கல்பனா தம்பதியினரின் மகன் கபிலன். இவருக்கு இரண்டு வருடத்திற்கு முன் திருமணமாகி குடும்ப தகராறு காரணமாக கபிலன் தனது மனைவி பாலபாரதியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கபிலன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக மன்னார்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் விசாரணைக்கு தமிழ்க்கண்ணன் வீட்டிற்கு சென்ற பெண்காவலர்கள் தமிழ்கொடி, விஜயலெட்சுமி ஆகியோர் தமிழ்கண்ணனின் மகளும் கபிலனின் தங்கையுமான பிரியதர்ஷினியை தலை முடியை பிடித்து இழுத்து தெருவில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அக்கம் பக்கத்தினர் பிரிய தர்ஷினியை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

விசாரணைக்கு உரியவர்களை மகளீர் காவல்துறையினர் அழைத்து செல்லாமல் கபிலனின் தங்கையை நடுரோட்டில் அவமானபடுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பேட்டி கல்பனா ( பிரியதர்ஷினி தாய் )

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!