திருவாரூர் பொதக்குடியில் இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்பு

திருவாரூர் பொதக்குடியில் இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்பு
X

பொதக்குடியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பொதக்குடியில் இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.

ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு நிகழ்வுகளை நடத்துவதும் மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்