மன்னார்குடியில் தரமற்ற அரசு பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்

மன்னார்குடியில் தரமற்ற அரசு பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்
X

மன்னார்குடியில் தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

மன்னார்குடியில் தரமற்ற அரசு பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியினை குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குறிப்பாக தமிழக முதல்வர், அமைச்சர்கள் முதல், கல்விதுறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெற்றோர்களுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளை தவிர்த்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதே.

இந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் மாணவ மாணவியர்களுக்கு கல்வி வழங்கிவருகிறது. ஆனால் இதற்கு விதிவிலக்காக மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் எல்.கே.ஜி, யூகேஜி மற்றும் 1முதல் 5 வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத நிலையில் மிககுறுகிய இடத்தில் அனைத்து குழந்தைகளையும் வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போதிய ஆசிரியர்கள் இல்லாதநிலையில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அரசின் சட்ட விதிகளுக்கு முரணாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் என்றால் தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் கல்வி சிறப்பாக செயல்படுவதாக கூறியதால் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துள்ளதாகவும் .இதுகுறித்து பெற்றோர்கள் தமிழக முதல்வரின் தனிப்பரிவு, பள்ளி கல்வி அமைச்சர், கல்விதுறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு தரப்பினருக்கு புகார் மனு அளித்தும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் இப்பள்ளி மீது எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் பகுதியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மேல்மாடியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட உதவி தொடக்கக்கல்வி துறையில் உள்ள அலுவலர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு சில நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!