நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
திருவாரூர் அருகே மழைால் சேதம் அடைந்த நெல் வயலை பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல்மணிகள் முளைக்க துவங்கியுள்ளது/ இந்நிலையில் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் மழையின் காரணமாக மூழ்கிய பயிர்களை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதிலும்கொள்முதல் செய்வதிலும் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனை தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் குறுவை நெல் கொள்முதலை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உள்ள ஈரப்பத நெல்லை நெல்லை கொள்முதல் செய்வதற்கு காலத்திலேயே மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும் .
அவ்வாறு அனுமதி பெறாவிட்டால் தமிழக அரசு பொறுப்பேற்று பின் அனுமதி பெறுகிற வகையில் நெல்கொள்முதலை தடையின்றி நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் . ஆனால் இதுவரையிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டிக்கிடக்கிறது கடந்த சில நாட்களாக பெய்த பேய் மழையால் ஒட்டுமொத்தமாக அழுகத்தொடங்கியுள்ளது .
அதிகாரிகளுடன் கலந்து பேசி அதிகாரிகள் சொல்வதைக் கேட்பதால் நேரடியாக பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு எந்த தீர்வும் அடையப் போவது இல்லை எனவே நேரடியாக களத்தில் வந்து விவசாயிகளை முன்னிலைப்படுத்தி அவர்களுடைய கருத்தை கேட்டு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .
தமிழக அரசு புதிய கொள்முதல் திட்டங்களை அறிமுகப்படுத்த வில்லை இது 25 ஆண்டுகாலமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது சென்ற ஆண்டு காவிரி டெல்டாவில் எத்தனை நிலையங்கள் திறக்கப்பட்டது. விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu