மன்னார்குடி அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

மன்னார்குடி அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
X

மன்னார்குடி அருகே சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மன்னார்குடி அருகே நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி சம்பவ இடத்தில் பலியானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மூவாநல்லூர் அரசு கொள்முதல் நிலைய சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு பின்னர் அரசு மில் அறவைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இந்த நெல் சேமிப்பு கிடங்கில் பாமணி கிராமத்தை சேர்ந்த நடராஜன் (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் இன்று வழக்கமாக பணிக்கு வந்த நிலையில் நடராஜன் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கூலி தொழிலாளி நடராஜனுக்கு மனைவி மற்றம் மூன்று மகன்கள் உள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail