மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

மன்னார்குடியில்  கொரோனா தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி
X

மன்னார்குடியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் 

மன்னார்குடியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அனைவருக்கும் பரிசு வழங்கபட்டது

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி மற்றும் ஸ்ரீராம் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் கொரானா தடுப்பு ஊசி சிறப்பு முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் மன்னார்குடி கிளை சார்பில் லாரி ஓட்டுனர்கள் மற்றும்உதவியாளர்களின் குழந்தைகளுக்கு 8 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ 2,500 11, வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ 3,500 என வழங்கப்பட்டது. இதில் இந்தாண்டு கல்வி உதவித் தொகையாகமொத்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கபட்டுள்ளதாக நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!