மன்னார்குடியில் தனியாக வசித்தவரை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

மன்னார்குடியில் தனியாக வசித்தவரை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
X

கொள்ளை முயற்சி  நடந்த வீடு.

மன்னார்குடி அருகே முகமூடி கொள்ளையர்கள் முதியவரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் ஒ. என்.ஜி.சி. சாலையில் உள்ள நடேசன் (60) என்பவர் தனியாக வசித்து வருகிறார் . இவரது மகன் மாணிக்கவாசகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மன்னார்குடியில் உள்ள பல பகுதிகளில் அதிக இடங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக தெரிகிறது .இதனை நோட்ட மிட்ட வெளி மாநில கொள்ளையர்கள் , வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு முகத்தில் முகமூடி அணிந்து இரவு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று நடேசனை கயிற்றில் கட்டி போட்டு அவரை தாக்கி விட்டு பீரோவில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளனர் .

பலத்த காயமடைந்த நடேசன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தகவல் அறிந்து வந்த பரவாக்கோட்டை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடேசனுக்கு இரண்டு மகள்கள் திருமணமாகியுள்ளனர் மற்றும் அவரது மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவாக்கோட்டையில் உள்ள வீடுகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் கொள்ளையில் ஈடுபடும் வெளிமாநில கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!