மன்னார்குடியில் உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு

மன்னார்குடியில்  உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு
X
மன்னார்குடியில் உலக செவிலியர் தினத்தையொட்டி நர்ஸ்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

செவிலியர் புளோரன்ஸ் நைட் டிங் கேள் அம்மையாரின் பிறந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாக மே மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சேவை என்பது இன்றியமையாத ஒன்று. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் விஜயகுமார், உதவி நிலைய மருத்துவர் கோவிந்தராஜன் தலைமை செவிலியர் வசந்தா,செவிலியர்கள் வசந்தி,விஜயா,தனபாக்கியம்,அமுதா மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story
ai future project