லஞ்சம்பெற்ற மன்னார்குடி சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது
கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் தினேஷ்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நந்தகோபால், ஆய்வாளர் தமிழ்செல்வி , சித்ரா உள்ளிட்ட 5 பேர் கொண்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவின்போது அதிகாரிகள், ஊழியர்கள் பெருமளவு லஞ்சம் பெற்றுவருவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வீரமணியின் மனைவி வினோதினி செருமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்லாக்கொள்ளை என்ற பகுதியில் தனது சகோதரரின் பங்கை தானசெட்டில் மென்டில் இடத்திற்கான அரசு நிர்ணயம் செய்த பத்திர பதிவு கட்டணமான ரூ.2,250க்கான முத்திரைதாள் வாங்கி பத்திர பதிவு செய்யும் வகையில் அரசு அங்கீகாரம் பெறாத முத்திரைதாள் விற்பனையாளர் கென்னடி என்பவரை அணுகியுள்ளார்.
ஆனால் முத்திரைதாள் விற்பனையாளர் கென்னடியும், மன்னார்குடி சார்பதிவாளர் தினேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து வினோதினியிடம் அவர் வாங்கிய இடத்திற்கான அரசு நிர்ணயம் செய்துள்ள பத்திரபதிவு கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக ரூ.25, ஆயிரத்திற்கு மேல் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வினோதினியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரசாயனம் பூசிய பணத்தை கொடுத்துள்ளனர்.
இப்பணத்தை வினோதினி சார்பதிவாளரிடம் லஞ்சமாக கொடுத்தபோது மறைந்து நின்ற லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சார்பதிவாளரை கையும் களவுமாக பிடித்தனர். இதுசம்மந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மன்னார்குடி சார்பதிவாளர் மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத முத்திரைத்தாள் விற்பனையாளர் கென்னடி ஆகியோரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு சார்பதிவாளர் தினேஷ் மற்றும் புரோக்கர் கென்னடி ஆகியோரை கைது செய்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu