மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பவித்திர உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில்  பவித்திர உற்சவம்
X

ராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவத்தில் தாயார்களுடன் பெருமாள் உலா

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பவித்ர உற்சவத்தில் தாயார்களுடன் பெருமாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் பவித்திர உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஆறு தினங்களுக்கு பெருமாள் கோவிலில் உள் பிரகாரங்களில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏழாம் நாளன்று ருக்மணி , சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி உலா வந்தார் .

பல வண்ண பட்டு மாலைகளை அணிந்து தாயார்கள் மற்றும் பெருமாள் காட்சி அளித்தனர் . யாகசாலையின் முன்பு பூர்ணாஹுதி நடைபெற்றது பின்னர் முத்தவெளியில் கும்ப ஆரத்தி கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது. யானை செங்கமலம் பெருமாளையும் தாயாரையும் மூன்று முறை வலம் வந்து வணங்கியது .

Tags

Next Story
ai in future agriculture