பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி

பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி
X

ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியாக ராஜகோபாலசுவாமி ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முதல் பகுதியான பகல் பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் 8-ம் நாள் நிகழ்ச்சியான இன்று ராஜ அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி 1000-ம் கால் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். முற்ற வெளியில் வந்து அமர்ந்த ராஜகோபாலசுவாமியை யானை செங்கமலம் சாமரம் வீசி மூன்றுமுறை வலம் வந்தது.

அதனையடுத்து ராஜ அலங்காரத்தில் இருந்த ராஜகோபாலசுவாமிக்கு கும்ப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆழ்வார்கள் ஒவ்வொருவராக பெருமாளின் முன்பு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு மாலை, மஞ்சள், வெற்றிலை, சடாரி சாற்றி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!