மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 3ந்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வந்தார். அப்போது பெருமாள் ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நடத்தப்பட்டது. சன்னதியிலிருந்து ருக்மணி சத்யபாமா தாயார்கள் சமேதராக வைரமுடி கிரீடம் அணிந்து அருள்பாலித்த ராஜகோபாலசுவாமி கோவிலில் பல்வேறு சன்னதிகளின் வழியாக வந்து நந்தவனம் அருகில் அமைந்துள்ள சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். சுமார் 2 மணி நேரம் தீட்சிதர்கள் வேத பாராயணங்கள் பெருமாளின் முன்பு பாடி நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சியளிக்கும் வைபவத்தை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!