மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ணாடி பள்ளியறை சேவையில் பக்தர்கள் தரிசனம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ணாடி பள்ளியறை சேவையில் பக்தர்கள் தரிசனம்
X

சிறப்பு அலங்காரத்தில் மன்னார்குடி ராஜகோபாலசாமி.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ணாடி பள்ளியறை சேவையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குயில் ராஜகோபால சுவாமி கோவிலில் பெருமாள் பள்ளியறையில் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இக்கோவிலில் பெருமாள் சன்னதியின் எதிர்புறம் கண்ணாடி பள்ளியறை அமைந்திருக்கிறது. இந்த கண்ணாடி பள்ளியறையில் கிருஷ்ணர் அவதாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் படங்களாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ருக்மணி ,சத்யபாமா சமேதராக ஆபரணங்கள் அணிந்து, செங்கோல், குவளை பீடம் யானைத்தந்தம், சாட்டை ஏந்தி ராஜகோபாலசுவாமி ராஜஅலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலித்தார். கண்ணாடி பள்ளியறையில் எந்த பக்கத்தில் இருந்து சுவாமியை தரிசனம் செய்தாலும் பாமா, ருக்மணி சமேதராக காட்சியளிப்பார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!