மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா சஸ்பெண்ட்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்கீதா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத்தலமான ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது . இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த புளியம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சங்கீதா (35)என்பவர் செயல் அலுவலராக கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் செயல் அலுவலர் சங்கீதா நிர்வாக ரீதியாக சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. புகார் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆரம்ப கட்ட முகாந்திரங்கள் இருந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை மண்டல இணை ஆணையர் தென்னரசு தனது உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.

அந்த பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் செயல் அலுவலர் சங்கீதாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோயிலில் செயல் அலுவலராக வேலை பார்க்கும் கவியரசு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது .

செயல் அலுவலர் சங்கீதா மீதான புகார்கள் குறித்து துறை ரீதியான தொடர் விசாரணை நடைபெறும் என்றும் அதன் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது உயர் அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!