மன்னார்குடி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

மன்னார்குடி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்
X

மன்னார்குடி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

மன்னார்குடி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுத்துநிறுத்தி கைது செய்தனர் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த சென்ற மாற்றுத்திறனாளிகளை மன்னார்குடி காவல் துறையினர் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags

Next Story