உங்களுக்கு தெரியுமா? மன்னார்குடியில் ரூ.30 கட்டணத்தில் மருத்துவமனை

உங்களுக்கு தெரியுமா? மன்னார்குடியில் ரூ.30 கட்டணத்தில் மருத்துவமனை
X

மன்னார்குடியில் ரூ.30 கட்டணத்தில் செயல்படும் மருத்துவமனை.

மன்னார்குடி இஸ்லாமிய நண்பர்கள் சார்பில் 30 ரூபாய் கட்டணத்தில் செயல்படும் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எம்.ஐ.டி.ஹெல்த் கேர் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று ரிபன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். ஏழை,எளிய நடுத்தர மக்கள் நலம் பெறும் நோக்கில் மன்னை இஸ்லாமிய தோழமைகள் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக மகப்பேறு மற்றும் பொதுமருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது . இதற்கு கட்டணமாக 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 வரை பொதுமருத்துவமும், வாரம் ஒரு முறை மகப்பேறு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் ஏழை , எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 30 ரூபாய்க்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிப்பதன் மூலம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெற பேருதவியாக அமைந்துள்ளது இந்த மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!