கூட்டுறவு வங்கியில் ரூ 19 லட்சம் கையாடல்: வங்கி செயலாளருக்கு 2 ஆண்டு சிறை

கூட்டுறவு வங்கியில் ரூ 19 லட்சம் கையாடல்:  வங்கி செயலாளருக்கு 2 ஆண்டு சிறை
X
பரவாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், ரூ.19 லட்சம் கையாடல் செய்த வங்கி செயலாளருக்கு, 2 ஆண்டு சிறை விதித்து, மன்னார்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விபிஎன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (66). இவர் பரவாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக வேலை பார்த்து, ஓய்வு பெற்று விட்டார்.

இவர் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை, அந்த வங்கியில் செயலாளராக வேலை பார்த்த போது, சிலரோடு சேர்ந்து வங்கி பணத்தில் ரூ.19 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருவாரூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2005 செப்டம்பர் 24 ம் தேதியன்று பாஸ்கரன் உள்ளி ட்ட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர்.

இது தொடர்பான வழக்கு மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (எண் 2ல் ) நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே குற்றச்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கரனுக்கு 2 வருட சிறை தண்டனையும், ரூ 3 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வி.சி. குபேரசுந்தர் தீர்ப்பளித்தார். மேலும், வழக்கில் தொடர்புடைய 3 பேர்களை விடுதலை செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!