கொரோனா தடுப்பு - அனைத்து கட்சியினர், வணிகர்கள் கலந்துரையாடல்

மன்னார்குடியில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், காவல்துறை சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்கள் வணிகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், காவல்துறை சார்பில், கொரோனா பரவல் தடுப்பது குறித்து, வணிகர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மன்னார்குடி துணை காவல்கண்காணிப்பாளர் இளஞ்செழியன், காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வணிகர்கள் தங்கள் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினர்.

கொரோனா குறித்து வதந்திகளை பரப்பக்கூடாது, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், கடைகளுக்கு வரும் மக்கள் சமுக இடைவெளியை பின்பற்றவும், கைகளை தூய்மை செய்யவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாபாரிகள் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india