மன்னார்குடி அஇதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மன்னார்குடி அஇதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
மன்னார்குடியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்திற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார்.

அஇதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியல் இருந்தது யாருக்காவது ஏதேனும் பிரச்சனை உண்டா ஏழை , எளியோர் கிடையாது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை என மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் பேச்சு.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக , அஇதிமுக, அமமுக, உள்ளிட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தீவீரமாக வாக்குசேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇதிமுக வேட்பாளர் சிவா. ராஜமாணிக்கத்திற்கு வாக்கு சேகரித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நகராட்சிக்கு உட்பட்ட ஒத்தைதெரு, முன்றாம் தெரு, கீழபாலம், முதல்சேத்தி, ஜவர் சமாது உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்தில் தீவீர வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் அஇதிமுக ஆட்சி தான் அமையபோகிறது. இதை எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது. தேர்தல் அறிக்கையில் உள்ள நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வருவதற்கும், அம்மாவின் ஆட்சி தொடருவதற்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு திட்டங்களை கொடுக்கிற எடப்பாடியார் ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேண்டும். அஇதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது யாருக்காவது ஏதேனும் பிரச்சனை உண்டா? ஏழை எளியோர் கிடையாது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை ஜாதி, மதம் பார்க்கவில்லை. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அஇதிமுக.தமிழகத்தில் விவாசாயி முதலமைச்சராக வரவேண்டும் என கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் நினைக்கிறார்கள் என்றார்.

பிராச்சரம் தொடங்குவதற்கு முன் அமைச்சர் காமராஜ் , சிவராஜாமாணிக்கம் ஆகியோர் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ஆனந்த வினாயகர் கோவிலி்ல் சிறப்பு பூஜைகள் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு