தி.மு.க. முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி 102 -வது பிறந்த நாள் விழா

மன்னை நாராயணசாமி சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
தி.மு.க.முன்னோடி தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் 102-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மன்னை நாராயணசாமியின் பேரனும் மாநில மாணவரணி அமைப்பாளருமான சோழராஜன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி சூரியபிரகாஷ் , ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் , பாலஞானவேல் ஒரத்தநாடு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம் , நகர செயலாளர் வீரா கணேசன், உள்ளிட்ட தி.மு.க.வினர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்துநிலையத்தில் உள்ள மன்னை நாராயணசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் .இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய , நகர , இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu