ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 கட்டாய வசூல்: நோயாளிகள் குற்றச்சாட்டு

ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 கட்டாய வசூல்: நோயாளிகள் குற்றச்சாட்டு
X

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கு ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 பணம் கட்டாய வசூல் செய்வாதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் நோயாளிகள் குற்றச்சாட்டு .

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை உருவாகியுள்ளது . இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்தவமனையில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமலும் மருத்துவர்கள் நாள் ஒன்றுக்கு 1முறை மட்டுமே மருத்துவர்கள் வந்து பார்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில், கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கு செல்லும் நோயாளிகளிடம் மருத்துவ நிர்வாகம் கொரோனா சிடிஸ்கேன் எடுக்க ரூ 500 லஞ்சம் கேட்பதாக சிகிச்சை பெற்று வரும் பெண்கள் பேசிய வீடியோவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story