டீசல் விலை உயர்வை பொறுத்து லாரி வாடகை நிர்ணயம் செய்ய கோரிக்கை
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து திறந்தவெளி தற்காலிக சேமிப்பு கிடங்குகளுக்கு நெல் ஏற்றிச்செல்லும் லாரிகள் நெல் மூட்டைகளை இறக்குவதற்கு குறைந்தபட்சம்மூன்று அல்லது ஐந்து நாட்கள் வரை காத்திருக்கவேண்டிய நிலை உள்ளதாலும் ,நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு செல்லும் பாதை சேறும்,சகதியுமாக இருக்கிறது. அதைபோல் சுமைதூக்கும் பணியாளர்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதற்கு முழுகாரணமாகும்.
எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் லாரிகளுக்கு காத்திருப்பு கட்டணம் வழங்கவேண்டும்,டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் லாரிகளின் வாடகை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.எனவே டீசல் விலையை பொறுத்து அவ்வப்போது வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். சுந்தரகோட்டையில் செயல்படும் நவீன அரிசி ஆலையில் அரிசியை தரம் பிரித்துகொடுக்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன ஆலையாக மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu