மன்னார்குடி அருகே இடிதாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவி
டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் இளம் நடவு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டுர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெழுவத்தூர் , பெருவிடைமருதூர் , மானாங்காத்த கோட்டகம் ,பெருகவாழ்ந்தான் , கர்ணாவூர் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளன.
இந்த நெற்பயிர்களை அ.தி.மு.க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைகேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து பாலையூர் கிராமத்தில் சிலதினங்களுக்கு முன்பாக வயலில் விவசாய பணி மேற்கொண்டிருந்தபோது இடிதாக்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்த கூலிதொழிலாளி குமார் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10000 நிவாரணமாக வழங்கினார் .
இதில் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமாா் , அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா ராஜாமாணிக்கம் , கோட்டுர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாசேட் , கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் , துணைசெயலாளர் ஏங்கல்ஸ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu